தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவர் பெயரில் மோசடி பணம், பத்திரம் பறிமுதல்

மாணவர் பெயரில் மோசடி பணம், பத்திரம் பறிமுதல்

மாணவர் பெயரில் மோசடி பணம், பத்திரம் பறிமுதல்


UPDATED : நவ 24, 2026 10:00 PM

ADDED : நவ 24, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 10:00 PM ADDED : நவ 24, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலத்தில், மாணவர்கள் பெயரில் வங்கி கடன் மோசடி செய்த கண்ணகி, 45, மோனிஷா, 28, ஆகிய இருவர் வீட்டில் இருந்து, பணம், வீட்டுமனை பத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னங்குறிச்சியை சேர்ந்த கண்ணகி, ‘பெஸ்ட் எம்பவர்மென்ட் சர்வீஸ் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை நடத்தினார். இவர், வங்கி கடன் வாங்கி தருவதாக கல்லுாரி மாணவர்களிடம் கூறி, சேலம் உட்பட, 4 மாவட்டங்களில், 7,500 மாணவர்களிடம், 75 கோடி ரூபாய் மோசடி செய்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகாரின்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கண்ணகி, முத்துக்குமரன், 42, மோனிஷா உட்பட, 8 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான கண்ணகி, மோனிஷா ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் முதல், நேற்று மதியம் வரை விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில், ‘கண்ணகி, மோனிஷா வீடுகளில் சோதனை நடத்தி, 37 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 லட்சம் ரூபாய் மதிப்பு வீட்டுமனை பத்திரம், அடமானம் வைத்த, 90 கிராம் தங்க நகைக்கான ரசீது ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us