இலவச ஆடு: கேட்டு வாங்கிய வேலுார் தி.மு.க., எம்.பி.,
இலவச ஆடு: கேட்டு வாங்கிய வேலுார் தி.மு.க., எம்.பி.,
ADDED : செப் 23, 2024 08:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டசபை தொகுதி, நாகல் பஞ்சாயத்தில் புதியதாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை, அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சரின் மகனும், வேலுார் எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாகல் பஞ்சாயத்தை சேர்ந்த, இரு பெண் குழந்தைகள் பெற்ற, 45 பெண்களுக்கு தலா இரண்டு ஆடுகளை, தன் சொந்த செலவில் பஞ்., தலைவர் பாலா சேட் வாங்கி கொடுத்தார்.
இதை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு வழங்கினார். அப்போது எம்.பி., கதிர் ஆனந்த், ''எனக்கும் இரு பெண்கள் குழந்தைகள் உள்ளனர்.
எனவே எனக்கும் ஆடு வழங்க வேண்டும்,'' என்றார். பஞ்., தலைவர் சம்மதத்துடன், இரு ஆடுகளை கதிர் ஆனந்துக்கு, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.