'கிரடாய்' கட்டுமான கண்காட்சியில் தங்க நாணயம் இலவசம்
'கிரடாய்' கட்டுமான கண்காட்சியில் தங்க நாணயம் இலவசம்
ADDED : பிப் 01, 2026 06:26 AM

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 'கிரடாய்' கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி ஜன.,30ல் துவங்கியது. இன்று நிறைவடைகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, பிரபல நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள், 50க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரது பட்ஜெட்க்கும் ஏற்ற அபார்ட்மெண்ட், வணிக இடங்கள், வில்லாக்கள் உள்ளிட்ட கட்டடங்களை ஒரே இடத்தில் தேர்வு செய்யலாம்.
2 நாட்களில் ஆயிரத்துக்கு மேல் மக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கடந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த முறை ரூ.300 கோடிக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.3 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை பிளாட்டுகள், வில்லாக்கள், அப்பார்ட்மென்ட்கள், வர்த்தக இடங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். ரூ.3 லட்சத்திற்கு முன்பதிவு செய்யும் நபருக்கு 1 கிராம், ரூ.1 கோடிக்கு முன்பதிவு செய்தால் 25 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.3 கோடி வரை முன்பதிவு செய்தால் 40 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
முன்பதிவு செய்யும் மனை, வீடு உள்ளிட்டவற்றுக்கு கட்டுமான நிறுவனங்களுக்கு ஏற்ப பத்திரப்பதிவு செலவு, வீட்டு உபயோக பொருட்கள் வழங்குவது என சலுகைகள் உண்டு. மதுரை உட்பட சென்னை, கோவை, கொடைக்கானல், திண்டுக்கல் கட்டுமானங்களுக்கும் 'முன்பதிவு' செய்யலாம். மனை, வீடுகளை பார்வையிட வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. நிலம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற பில்டர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
குலுக்கல் முறையில் தினமும் பரிசு உண்டு. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, செல்பி ஸ்பாட், கட்டுமான பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி இன்றுடன் (பிப்.1) நிறைவடைகிறது. காலை 10:00 - இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

