பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது: உளவுத்துறை அதிர்ச்சி அறிக்கை
பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது: உளவுத்துறை அதிர்ச்சி அறிக்கை
UPDATED : ஏப் 13, 2025 09:13 AM
ADDED : ஏப் 13, 2025 07:30 AM

சென்னை: பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது என உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய இலவச பஸ் திட்டத்தால், தின மும் பல லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதையே கிண்டலடித்து, 'எங்கே போக வேண்டுமானாலும், ஓசி பஸ்சில் போறிங்க என்று பேசிய பொன்முடிக்கு, பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல பெண்கள், உங்க அப்பன் காசிலா நாங்கள் ஓசியில் போகிறோம்' என, சகட்டுமேனிக்கு பொன் முடியை விமர்சித்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, கட்சிதலைமையின் கோபத்திற்கு ஆளான பொன்முடி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
தற்போது, பெண்களையும், ஹிந்து சமயங்களையும் மிகவும் ஆபாசமாக பொன்முடி பேசியுள்ளார். பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் உள் ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய போதிலும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்களால், பெண்களின் ஆதரவை தி.மு.க., இழக்கக் கூடும் என கூறப்படுகிறது.
பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடை யாமல் இருக்க, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்குவதுதான் ஒரே வழி என, ஆட்சியாளர்களுக்கு உள வுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

