sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!

/

திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!

திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!

திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!

1


UPDATED : பிப் 22, 2026 02:25 PM

ADDED : பிப் 22, 2026 08:09 AM

Google News

1

UPDATED : பிப் 22, 2026 02:25 PM ADDED : பிப் 22, 2026 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 22) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று(பிப்ரவரி 22) முதல் தொடங்கியது. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.

* நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். மீரட்- டில்லி இடையிலான நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மக்களுக்கு அர்ப்பணித்தார்.

* டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை டி20 உலகக்கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்ததில் இந்தியா 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

* இலங்கை கொழும்புவில் மதியம் 3 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி உள்ளது. இன்று முதல் நாளைக்குள் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடலில் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

* கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர் நாகை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us