திருச்சி- அபுதாபி சேவை இனி இல்லை; இன்டிகோ அறிவிப்பால் பயணிகளுக்கு 'ஷாக்'
திருச்சி- அபுதாபி சேவை இனி இல்லை; இன்டிகோ அறிவிப்பால் பயணிகளுக்கு 'ஷாக்'
ADDED : அக் 21, 2024 07:37 PM

சென்னை: திருச்சி-அபுதாபி விமான சேவையை அக்டோபர் 25ம் தேதி முதல் ரத்து செய்வதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் பல விமானங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றன. அபுதாபிக்கு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி முதல் விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை இருந்தது.
மும்பை, கொச்சி, ஹைதராபாத் என 13 நகரங்களுக்கும் இன்டிகோ விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை வரும் (அக்.25) முதல் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்வோருக்கு பயன் உள்ள வகையில் இருந்த விமான சேவை நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.