sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக இடைக்கால பட்ஜெட் முதல் வங்கதேச புதிய அரசு பொறுப்பேற்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 17)!

/

தமிழக இடைக்கால பட்ஜெட் முதல் வங்கதேச புதிய அரசு பொறுப்பேற்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 17)!

தமிழக இடைக்கால பட்ஜெட் முதல் வங்கதேச புதிய அரசு பொறுப்பேற்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 17)!

தமிழக இடைக்கால பட்ஜெட் முதல் வங்கதேச புதிய அரசு பொறுப்பேற்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 17)!

2


UPDATED : பிப் 17, 2026 07:42 PM

ADDED : பிப் 17, 2026 08:07 AM

Google News

2

UPDATED : பிப் 17, 2026 07:42 PM ADDED : பிப் 17, 2026 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 17) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

* வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை, அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

* சட்டசபையில் வளாகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் தொடரை பிப்ரவரி 20ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

* வங்கதேச தேர்தலில் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று மாலை 4 மணிக்கு பிரதமராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்றார்.

* பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்தடைந்தார். அவர் மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார்.

* தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்களை சந்திக்கும் தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்தை இன்று முதல் பிப்வரி 28ம் தேதி வரை பாஜவினர் நடத்த உள்ளனர்.

இன்றைய போட்டிகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற்றன.

* சென்னையில் காலை 11 மணிக்கு நடக்கும் போட்டியில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* இலங்கை பல்லேகெலேவில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கவிருந்த அயர்லாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிக்கும் தலா 1 புள்ளி தரப்பட்டதால், ஆஸி., அணி போட்டியில் இருந்து வெளியேறியது. ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 பிரிவுக்கு முன்னேறியது.

* மும்பையில் இரவு 7 மணிக்கு நடந்த போட்டியில் நேபாளம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.






      Dinamalar
      Follow us