sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!

/

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!

2


UPDATED : பிப் 23, 2026 05:43 PM

ADDED : பிப் 23, 2026 08:46 AM

Google News

2

UPDATED : பிப் 23, 2026 05:43 PM ADDED : பிப் 23, 2026 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், இன்று காலை 10:00 மணிக்கு பட்டியலை வெளியிட்டனர்.

* சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகள் உடனான பேச்சு வார்த்தையை தி.மு.க., நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ம.தி.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன், தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர்.

* சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

* வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

* டி 20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* திமுகவினர் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக இன்று தொடங்குகின்றனர். இந்த பிரசாரத்தை உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதி வரை மேற்கொள்ள உள்ளனர்.






      Dinamalar
      Follow us