சட்டசபை கூட்டத்தொடர் முதல் உலக கோப்பை போட்டிகள் வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,18)
சட்டசபை கூட்டத்தொடர் முதல் உலக கோப்பை போட்டிகள் வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,18)
UPDATED : பிப் 18, 2026 05:46 PM
ADDED : பிப் 18, 2026 10:42 AM

நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 18) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் மற்றும் மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டி இன்று(பிப்.18) இரவு 7 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
* டில்லியில் காலை 11மணிக்கும் நடக்கும் போட்டியில் தென்ஆப்ரிக்கா- எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில், தென் ஆப்ரிக்கா அணியினர், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
* இலங்கை கொழும்பில் மதியம் 3 மணிக்கும் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்-நமீபியா அணிகள் மோதின.

