ADDED : ஜன 19, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இம்மாதம் 14ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது. கடந்த 9ம் தேதிக்கு பின், நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், வேதாரண்யத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால், அந்த இடங்களில், இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
சென்னையில் லேசான பனிமூட்டம் நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.