'பார்ட்டி பண்ட்' குறித்து முழுவீச்சில் தகவல் சேகரிப்பு
'பார்ட்டி பண்ட்' குறித்து முழுவீச்சில் தகவல் சேகரிப்பு
ADDED : ஜூன் 26, 2026 01:28 AM
சென்னை: தி.மு.க., ஆட்சி காலத்தில், 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில், அனைத்து துறைகளிலும் கட்சி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜயும், 'டாஸ்மாக் வாயிலாக பார்ட்டி பண்ட் வசூலிக்கப்பட்டது' என, தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 'எந்த கட்சி வாயிலாக வசூலிக்கப்பட்டது என, ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா' எனவும், உதயநிதி கேள்வி எழுப்பினார்.
அடுத்த சட்டசபை கூட்டம், பட்ஜெட் தாக்கலுடன் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. அப்போது, கட்சி நிதி வசூல் குறித்த முழு விபரங்களையும் அம்பலப்படுத்த, முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
அதனால், கட்சி நிதி வசூல் விபரங்களை சேகரிக்கும்படி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
