வருங்காலம் தி.மு.க.,வுக்கு பிரகாசமாக உள்ளது: பாரதி
வருங்காலம் தி.மு.க.,வுக்கு பிரகாசமாக உள்ளது: பாரதி
ADDED : செப் 30, 2024 06:19 AM
சென்னை : “உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளதால், வருங்காலம் தி.மு.க.,வுக்கு பிரகாசமாக உள்ளது,” என, தி.மு.க., அமைப்பு பொதுச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னையில் அவரது பேட்டி: துணை முதல்வராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்பது, தி.மு.க., மூத்த தலைவர்கள் முதல் கடைசி தொண்டர்கள் வரை நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒன்று. தொண்டர்கள் எதிர்பார்த்ததை முதல்வர் அறிவித்திருப்பது அனைவருக்கும் மனநிறைவு அளிக்கிறது. தி.மு.க.,வில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தி.மு.க.,வுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைப்பதற்கு, இதுபோன்ற செயல்பாடுகள் தான் காரணம். உதயநிதி அரசியலில் கால் பதித்த நாள் முதல், அவர் பிரசாரம் செய்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது தொடர் வெற்றியாக அமையும். வருங்காலம் தி.மு.க.,வுக்கு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

