செய்தி வாசிப்பாளர்கள் படத்துடன் ஆபாச பேச்சு வீடியோ பரப்பும் கும்பல்
செய்தி வாசிப்பாளர்கள் படத்துடன் ஆபாச பேச்சு வீடியோ பரப்பும் கும்பல்
ADDED : ஜூன் 28, 2025 04:22 AM

சென்னை : தமிழ் செய்தி வாசிப்பாளர்கள், ஆபாச வார்த்தைகள் பேசுவது போல சித்தரித்து, மர்ம நபர்கள் வீடியோக்களை பதிவேற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதள பக்கங்களில், சமீப காலமாக, தமிழ் செய்தி வாசிப்பாளர்கள், ஆபாச வார்த்தைகளில் பேசுவது போன்ற வீடியோக்கள் பரவி வருகின்றன.
அதில், சில உண்மையான செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ முழுதும் ஆபாச வார்த்தைகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, 'எடிட்' செய்துள்ளனர்.
நகைச்சுவைக்காக வீடியோக்கள் தயாரிக்கப்பட்டாலும், காதில் கேட்க முடியாத அளவிற்கு, ஆபாச வார்த்தைகள் உள்ளன. இவை குழந்தைகள் மத்தியில், தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். சிலரின் உண்மையான புகைப்படங்களை வைத்து வீடியோ வருவதால், பலர் உண்மையோ என நம்பும் அளவிற்கு உள்ளது.
இவற்றை தடுக்க, சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.