ADDED : டிச 07, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார், சண்முகபுரம் ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் 4 கிலோ கஞ்சா கடத்திச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, காரில் இருந்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை, 26, சுடலைகண்ணு, 34, துாத்துக்குடியைச் சேர்ந்த சுப்புராஜ், 25, மாரிலிங்கம், 24, வள்ளிநாயகம், 24, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 4 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.