தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காஸ் சிலிண்டர் இணைப்பு நிறுத்தம் எதிரொலி; புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதில் சிக்கல் 

காஸ் சிலிண்டர் இணைப்பு நிறுத்தம் எதிரொலி; புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதில் சிக்கல் 

காஸ் சிலிண்டர் இணைப்பு நிறுத்தம் எதிரொலி; புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதில் சிக்கல் 


ADDED : செப் 28, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; தமிழகத்தில் 6 மாதங்களாக, புதிதாக வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பலரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு, ரேஷன் கார்டு அவசியம்.

இதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில், 'ஆதார்' கார்டு, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்காசிய போர் காரணமாக, கடந்த மார்ச் முதல், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் ஏற்றி வரும் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், நம் நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அம்மாதத்தில் இருந்து, நாடு முழுதும் புதிய காஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது.

காஸ் வினியோக கட்டுப்பாடுகள் கடந்த ஜூலையில் விலக்கிக் கொள்ளப்பட்டன. எனினும், புதிய காஸ் இணைப்பு வழங்கப்படவில்லை. சட்டசபை தேர்தலால், மார்ச் முதல் ஜூன் வரை புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.

சட்டசபை தேர்தலில், 'மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, தவெக வாக்குறுதி அளித்தது. அக்கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், தனி குடும்பத்துடன் வசிக்கும் பலர், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், காஸ் சிலிண்டர் ரசீது இல்லாததால், விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

தேர்தலால் மார்ச் முதல் ஜூன் வரை ரேஷன் கார்டு வழங்கவில்லை. புதிய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோர், காஸ் ஏஜென்சிகளில், 14.20 கிலோ எடை உடைய காஸ் சிலிண்டர் இணைப்பு கேட்டால் தருவதில்லை; அதற்கு பதில், 5 கிலோ சிலிண்டர் தருகின்றனர்.

காஸ் சிலிண்டர் ரசீது இல்லாமல், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர். இது குறித்து கேட்டால், 'வீட்டு முகவரிக்கு காஸ் சிலிண்டர் ரசீது இல்லை என்றால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவே கூடாது' என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, புதிய காஸ் இணைப்பை விரைவாக வழங்க மத்திய அரசும், புதிய ரேஷன் கார்டை வழங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us