ADDED : மார் 20, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், பறக்கும் படை தனி தாசில்தார் வாசுதேவன், வட்ட வழங்கல் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் திருக்கோவிலுார், குல தீபமங்கலம், குச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு ஹோட்டல்களில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.