சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மாணவியர் 35 பேர் மயக்கம்
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மாணவியர் 35 பேர் மயக்கம்
UPDATED : அக் 25, 2024 05:50 PM
ADDED : அக் 25, 2024 03:36 PM

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில், மாணவியர் 35 பேர் மயக்கம் அடைந்தனர்.
திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை திடீரென வாயுநெடி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் மாணவியர் 35 பேர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளிக்கு அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்ததா அல்லது பள்ளி ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதா என விசாரணை நடக்கிறது. பள்ளியில் தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாக்குவாதம்
தகவல் அறிந்த பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளி முன் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், சுகாதாரத்துறையினர், வாயுக்கசிவு குறித்து ஆய்வு நடத்தினர்.