கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ADDED : ஜன 19, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய புலனாய்வு
ஏஜென்சி அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத்தை
போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வந்தனர்.
வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு
கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கவர்னர் மாளிகை மீது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம்
124- ன் கீழ் (கவர்னரை தாக்க முற்பட்டது, ) பிரிவுகளை சேர்த்து
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

