sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அரசுக்கு 60 நாட்கள் கெடு!

/

தமிழக அரசுக்கு 60 நாட்கள் கெடு!

தமிழக அரசுக்கு 60 நாட்கள் கெடு!

தமிழக அரசுக்கு 60 நாட்கள் கெடு!


ADDED : செப் 25, 2023 05:30 AM

Google News

ADDED : செப் 25, 2023 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை சட்டசபை தொகுதியில், சீதையை மீட்கச் சென்ற ராமர் வணங்கி அருள் பெற்றுச் சென்ற மாசாணி அம்மன் குடி கொண்டிருக்கும் திருத்தலத்திலும், இயற்கையின் எழில் மிகுந்த, இனிமை சூழல் மாறாமல் இருக்கும் பொள்ளாச்சியிலும், நேற்றைய பாதயாத்திரை பயணம் தொடர்ந்தது.

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்கிறேன்; இத்தனை பெரிய கூட்டத்தை இங்கே எதிர்பார்க்கவில்லை. மலை தேனீக்களைப் போல, மலைப்பகுதியிலே மலைக்க வைக்கும் மக்கள் கூட்டத்தில்; அவர்கள் காட்டிய அன்பில், வரவேற்பில் நான் சின்ன அணுத்துகளாக உணர்ந்தேன்.

தி.மு.க., அரசின் திகைக்க வைக்கும் ஊழல்களையும், நாடக அரசியலையும் நன்றாக புரிந்துள்ள மக்கள் அத்தனை பேரும், வீதிக்கு வந்திருக்கின்றனர்.

மக்கள் எழுச்சி, பா.ஜ., வெற்றிக்கான பாதையை உறுதி செய்கிறது. அரசியல் மாற்றத்தில் தங்கள் பங்களிப்பை அளிக்கமக்கள் தயாராகி விட்டது, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தி.மு.க., -- காங்.,துரோகம்

கடந்த 2020 ஜனவரியில் பொள்ளாச்சி நகருக்கு, மத்திய அரசு, 'டவுன் ஆப் எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ்' என்ற அங்கீகார விருது வழங்கி கவுரவித்தது. இங்கு தயாராகும் நெகமம் பருத்தி புடவைகளுக்கு, இந்த ஆண்டு புவிசார் குறியீடு வழங்கி கவுரவித்தது.

திண்டுக்கல், பொள்ளாச்சி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு, 3,649 கோடி ரூபாய் ஒதுக்கி, சாலை பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு ஜூனில், இந்தச் சாலையில் பயணம் துவங்கும்.

தமிழகத்தில், 11 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. 'தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், சத்துணவில் தேங்காய் பால் வழங்கப்பட வேண்டும்' என்றும், பா.ஜ., தொடர்ந்து போராடி வருகிறது.

தேங்காயின் அடிப்படை கொள்முதல் விலையை, 52 ரூபாயில் இருந்து, 108 ரூபாயாக மத்திய அரசு உயர்த்திய போதும், மாநில அரசு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியாருக்கு அந்த பலனை அளித்து வருகிறது.

வால்பாறை மக்களுக்கு, தி.மு.க., - -காங்., கூட்டணி செய்த மிகப் பெரிய துரோகம், 2007 டிச., 28ல் வெளியான அரசாணை.

இந்த அரசாணை எண் 145ன்படி, ஆனைமலை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, அதற்கென்று 959 சதுர கி.மீ., ஒதுக்கப்பட்டது. ஆனால், வால்பாறை, 'டாப்ஸ்லிப்' பகுதியில் மட்டுமே புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட, 959 சதுர கி.மீட்டரில், இது, 20சதவீதம்கூட இருக்காது.

இதனால், பெருவாரியான மக்கள் வாழும், வனப்புற எல்லை கிராமங்களான ஆழியாறு, அங்கலங்குறிச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதுார் முதல் பூண்டி வரை, 100க்கும் மேற்பட்டகிராமங்கள் பாதிக்கும்.

எந்த முன்னறிவிப்பும் கிராம சபையின் ஒப்புதலும் இன்றி, புலிகள் காப்பகத்தின் வெளிவட்டமாக, 521 சதுர கி.மீ.,க்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.

ஆக மொத்தம், 1,480 சதுர கி.மீ., தேவைக்கும் அதிகமான நிலங்கள் புலிகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்டதால், மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., ஆட்சியில், திடீரென்று வால்பாறையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியால் சுற்றுலா பயணியரும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வரும், 60 நாட்களுக்குள் மாநில அரசு,மக்களுடன் பேச்சு நடத்தி சுமுகமான முடிவை எடுக்கவில்லை என்றால், நீலகிரியில் நடத்தப்பட்ட 'டான் டீ' போராட்டத்தை போல, வால்பாறையிலும் தமிழக பா.ஜ., மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.

அணை கட்டவில்லை

ஆனைமலை ஆறு அணை கட்டும் திட்டம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆனால், கேரள அரசு இடைமலையாறு அணையை கட்டிய பின்தான், தமிழக அரசு ஆணை மலையாறு அணை திட்டத்தை செயல்படுத்த துணை ஒப்பந்தம் போட்டுள்ளது.

கடந்த 1970ல் துவங்கி 1985 - ----86 வாக்கில் தங்கள் அணையை கட்டி முடித்ததாக, கேரள அரசு இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடக்கும்போது, மேற்கண்ட அணை இன்னும் கட்டப்படவில்லை என்று, கேரள அரசு அதிகாரிகள் பொய் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பொது மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரிந்திருக்கும் இந்த உண்மை, தமிழக அரசுக்கு மட்டும் தெரியாமல் இருப்பது வியப்பு அளிக்கிறது.

தமிழக அரசின் நீர் மேலாண்மை திட்டங்களில், கேரள கம்யூனிஸ்ட் அரசு தொடர்ந்து பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் செண்பக வல்லியணை, நொய்யாறு கால்வாய், முல்லை பெரியாறு, பம்பா அச்சன்கோவில் ஆறு இணைப்பு என்று அனைத்து திட்டங்களையும் கேரளா வஞ்சித்து வருகிறது.

கேரள அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்க வேண்டிய தமிழக முதல்வர், மலையாளத்தில் ஓணம் வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

'வயலின் சேறு கூட வேட்டியில் ஒட்டிக் கொள்ளக்கூடாது' என்று, வயல்களுக்கு நடுவில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிடச் செல்லும் முதல்வருக்கு, விவசாயிகள்படும் வேதனை எப்படி புரியும்?

இதற்கெல்லாம் வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு நிமிர முடியாத அளவுக்கு மக்கள் அடி கொடுப்பர்.

- பயணம் தொடரும்...






      Dinamalar
      Follow us