கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!
கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!
UPDATED : டிச 30, 2024 09:53 PM
ADDED : டிச 30, 2024 05:42 PM

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் அமைக்கப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார்.
![]() |
![]() |
![]() |
கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று (டிச.30) கன்னியாகுமரி சென்ற முதல்வர் ஸ்டாலின் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பாலத்தில் நடந்து சென்ற அவர், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
![]() |
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கண்ணாடி இழை பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது காணலாம்.
![]() |
* 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
* பாலத்தின் நீளம் 77 மீட்டர், அகலம் 10 மீட்டர்.
* விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்லலாம்.
* கண்ணாடி இழை பாலம் முடிவடையும் இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு.
• இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது இங்கு மட்டுமே.
* பாலத்தில் நடந்து செல்லும் போது கால்களுக்கு கீழே கடல் தண்ணீர் செல்வதை நேரிடையாகவே காணலாம்.
*விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட இனி பாலத்தில் நடந்து செல்லலாம். படகு பயணம் அவசியமாகாது,