சென்னையில் உலகளாவிய மையம் ஜப்பான் 'மிசுஹோ' துவக்கியது
சென்னையில் உலகளாவிய மையம் ஜப்பான் 'மிசுஹோ' துவக்கியது
ADDED : அக் 10, 2024 08:53 PM
சென்னை:ஜப்பானை சேர்ந்த, 'மிசுஹோ பைனான்சியல்' குழுமம், அந்நாட்டில் நிதிச்சேவையில் ஈடுபட்டு வரும் மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இதன் துணை நிறுவனமான'மிசுஹோ குளோபல் சர்வீசஸ் இந்தியா', சென்னை பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அதன் உலகளாவிய மையத்தை துவக்கியுள்ளது. இதை தொழில் துறை அமைச்சர் ராஜா, துவக்கி வைத்தார்.
மையத்தில், ரோபடிக்ஸ், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் நிதிச்சேவையில் பயன்படுத்தப்பட உள்ளன.
வர்த்தக மையத்தில் சிறிய அளவில் செயல்பட்டு வந்த மிசுஹோ, தற்போது உலகளாவிய மையத்தை திறந்துள்ளதால், 1,000 பேருக்கு உயர்நிலை வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு மற்றும் மிசுஹோ அதிகாரிகள் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.