உலக முதலீட்டாளர் மாநாடு: ஒரே நாளில் 5.5 லட்சம் கோடி முதலீடு
உலக முதலீட்டாளர் மாநாடு: ஒரே நாளில் 5.5 லட்சம் கோடி முதலீடு
UPDATED : ஜன 07, 2024 05:46 PM
ADDED : ஜன 07, 2024 05:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டு துவங்கிய முதல் நாளில் 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கு எட்டப்பட்டு உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றும், நாளையும் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொழில்துறை செயலர் அருண் ராய் கூறுகையில், மாநாட்டில் 5.5 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பது என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டது. இன்று மட்டும் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.