sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது!

/

ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது!

ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது!

ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது!

7


UPDATED : மார் 22, 2026 03:38 PM

ADDED : மார் 22, 2026 07:41 AM

Google News

7

UPDATED : மார் 22, 2026 03:38 PM ADDED : மார் 22, 2026 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்., கோட்டை சோதனை சாவடியில் இன்று (மார்ச் 22) அதிகாலை நடந்த வாகன சோதனையில், மதுரையில் இருந்து கார்த்திகேயன் என்பவர் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்., கோட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

நிலையான கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கல்லல் பி. டி. ஓ., பாலமுருகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில், உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ. 4.51 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் எடுத்துச்செல்வது கண்டறியப்பட்டு, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், மதுரையை சேர்ந்த மாயாண்டி மகன் கார்த்திகேயன் என்பவர் தெரியவந்தது. இவர் மதுரையில் இருந்து தங்க கட்டிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, சோதனை சாவடியில் பறக்கும் படை ஆய்வில் சிக்கியது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us