sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபரண தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

/

ஆபரண தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

ஆபரண தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

ஆபரண தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

2


ADDED : ஜன 10, 2026 10:00 AM

Google News

ADDED : ஜன 10, 2026 10:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 08) ஆபரண தங்கம் கிராம், 12,750 ரூபாய்க்கும், சவரன், 1,02,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 272 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (ஜனவரி 09), தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,02,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம் வெள்ளி கிராம், நான்கு ரூபாய் குறைந்து, 268 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.68 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகுகிறது.






      Dinamalar
      Follow us