ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு
ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு
UPDATED : அக் 18, 2024 03:41 PM
ADDED : அக் 18, 2024 10:10 AM

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் கூட இல்லாத நிலையில், தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்கியிருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாலர் விலை உயர்வு, போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 7,240 ரூபாய்க்கும், சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 57,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 1,160 அதிகரித்துள்ளது.
இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.105க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,05,000க்கும் விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.