உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 01, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,505 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து, 14,370 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,080 ரூபாய் சரிவடைந்து, ஒரு லட்சத்து 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
