தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு; ஒரு சவரன் ரூ.71,480!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு; ஒரு சவரன் ரூ.71,480!
ADDED : மே 28, 2025 09:49 AM

சென்னை: சென்னையில் இன்று (மே 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8935க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 26) ஆபரண தங்கம் கிராம், 8,950 ரூபாய்க்கும், சவரன், 71,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று (மே 27) தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 8,995 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 71,960 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (மே 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.8935க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.