தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு; ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு; ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை
UPDATED : டிச 19, 2025 10:11 AM
ADDED : டிச 19, 2025 10:08 AM

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 17) ஆபரண தங்கம் கிராம், 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 222 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (டிசம்பர் 18), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 12,440 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 99,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து, 224 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.221க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.

