ADDED : நவ 25, 2024 11:06 AM

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57,600க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதையடுத்து சரிவை கண்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக உயர்வை கண்டது.
*நவ.,19ம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
* நவ.,20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 7,115 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 56,920 ரூபாய்க்கு விற்பனையானது.
* நவ.,21ம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160க்கும் விற்பனையானது.
* நவ.,22ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனையானது.
* நவ.,23ம் தேதி ஒரு கிராம் ரூ.7,300க்கும், ஒரு சவரன் ரூ.58,400க்கும் விற்பனை ஆனது. நேற்று (நவ.,24) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.
* இந்நிலையில், இன்று (நவ.,25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57,600க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200க்கும் விற்பனை ஆகிறது.
* ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.