இன்னைக்கு குட்நியூஸ்; மீண்டும் ரூ.58 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது தங்கம் விலை
இன்னைக்கு குட்நியூஸ்; மீண்டும் ரூ.58 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது தங்கம் விலை
ADDED : டிச 13, 2024 11:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதும் என நிலைமைகள் மாறின.
கடந்த இரு தினங்களாக உயர்ந்தே காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. ஒரு கிராம் 55 ரூபாய் சரிந்து ரூ.7,230 ஆகவும், சவரன் ரூ.57,840 ஆகவும் இருக்கிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.3 சரிந்து ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.1 லட்சத்து ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.