3 நாட்களுக்குப் பிறகு எகிறிய தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.480 அதிகரிப்பு
3 நாட்களுக்குப் பிறகு எகிறிய தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.480 அதிகரிப்பு
ADDED : செப் 20, 2024 10:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தங்கம் விலை திடீரென உயர்ந்திருப்பதால் ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ரூ.440 வரை சரிந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ரூ.55,080 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6,885க்கு வர்த்தகமாகிறது.
அதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்பெற்றே வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 அதிகரித்து ரூ.97.50க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.