sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; வெள்ளி விலையும் புதிய உச்சம்

/

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; வெள்ளி விலையும் புதிய உச்சம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; வெள்ளி விலையும் புதிய உச்சம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; வெள்ளி விலையும் புதிய உச்சம்

6


ADDED : ஜன 19, 2026 09:41 AM

Google News

ADDED : ஜன 19, 2026 09:41 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியும் புதிய உச்சம்

வெள்ளி விலையும் கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us