2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
UPDATED : ஏப் 24, 2025 05:50 PM
ADDED : ஏப் 24, 2025 09:56 AM

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,290 ரூபாய்க்கும், சவரன், 74,320 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 23) தங்கம் விலை கிராமுக்கு 275 ரூபாய் குறைந்து, 9,015 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 2,200 ரூபாய் சரிவடைந்து, 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,200 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், நேற்று அதே அளவுக்கு குறைந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,005க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை, ஒரு சவரனுக்கு ரூ.2280 சரிந்துள்ளது. தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.