sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்

1


UPDATED : பிப் 04, 2026 10:07 AM

ADDED : பிப் 04, 2026 10:06 AM

Google News

1

UPDATED : பிப் 04, 2026 10:07 AM ADDED : பிப் 04, 2026 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த வாரம் உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை, சில தினங்களாக குறைந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 02) ஆபரண தங்கம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (பிப்ரவரி 03) காலை தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 14,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,12,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,920 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளியும் அதிகரிப்பு

வெள்ளி விலையும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,






      Dinamalar
      Follow us