தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு; ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு; ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!
ADDED : நவ 29, 2024 09:49 AM

சென்னை: 'சென்னையில் இன்று (நவ.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். நவ.,27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,840க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ. 7105க்கும் விற்பனையானது. நேற்று (நவ.,28) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவ.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தாண்டியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.