இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 05, 2025 09:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 05) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்கள் முன்னதாக ஆபரணத் தங்கத்தின் விலையில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிலவின. தங்கம் விலை ஏற்றம் கண்டதால் பெண்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந் நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. ஒரு கிராம் 90 ரூபாய் குறைந்து ரூ.8310க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்கப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் ரூ.2000 வரை சரிவு காணப்பட்டுள்ளது. விலை சரிவை அறிந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.