தொடர்ந்து குறையும் தங்கம் விலை: 4 நாட்களில் ரூ.3,160 குறைந்தது
தொடர்ந்து குறையும் தங்கம் விலை: 4 நாட்களில் ரூ.3,160 குறைந்தது
ADDED : ஜூலை 26, 2024 10:31 AM

சென்னை: தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.6,415 விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை ஆகிறது.
ஜூலை 17ம் தேதி, சவரன் விலை 55,360 ரூபாயாக அதிகரித்தது. பின், விலை சற்று குறைந்தது. கடந்த ஜூலை 22ம் தேதி சவரன், 54,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஜூலை 23ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு வந்தது. சவரனுக்கு அதிரடியாக, 2,200 சரிந்து, 52,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3.10 ரூபாய் குறைந்து, 92.50 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
அப்போது இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,415க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.51,320க்கு விற்பனை ஆகிறது. 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.89க்கு விற்பனையான நிலையில், இன்றும் அதே விலை தொடர்கிறது.