தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைவு
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைவு
ADDED : நவ 13, 2024 10:46 AM

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (நவ.,12) சவரனுக்கு ரூ.1,080 குறைந்திருந்த நிலையில், இன்று (நவ.,13) மீண்டும் ரூ.320 குறைந்தது; ஒரு சவரன் ரூ.56,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டதால் தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் கூறினர். நவ.,11ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டு சவரனுக்கு ரூ. 440 குறைந்து, ரூ.57,760க்கு விற்பனையானது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று (நவ.,12) தங்கத்தின் விலையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1.080 அதிரடியாக குறைந்து தங்கம் விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ, 56,680 ஆக உள்ளது.ஒரு கிராம் ரூ.135 குறைந்து, ரூ.7,085 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (நவ.,13) மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் ரூ.56,360க்கும், ஒரு கிராம் 7,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.