தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
UPDATED : ஜன 24, 2026 02:43 PM
ADDED : ஜன 24, 2026 09:43 AM

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 24) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மதியம் மீண்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மாலையில், தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 14,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 1,16,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 24) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதியம் மீண்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கு கூடியது மவுசு
காலை வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. மதியம் மீண்டும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 65 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

