UPDATED : மார் 03, 2026 06:16 PM
ADDED : மார் 03, 2026 09:53 AM

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,465 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, அந்நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. எனவே, சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஆபரண தங்கம் சவரனுக்கு, 7,000 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 30,000 ரூபாயும் அதிகரித்தன.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 01) ஆபரண தங்கம் கிராம், 15,775 ரூபாய்க்கும், சவரன், 1,26,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (மார்ச் 02) தங்கம் விலை கிராமுக்கு, 115 ரூபாய் குறைந்து, 15,660 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 920 ரூபாய் சரிவடைந்து, 1,25,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 315 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மாலை இந்த விலை மேலும் குறைந்தது. சவரனக்கு 1,480 ரூபாயும், கிராமுக்கு 185 ரூபாயும் குறைந்தது.
இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 185 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,465 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

