sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே நாளில் 3 முறை மாற்றம் கண்ட தங்கம் விலையில்

/

ஒரே நாளில் 3 முறை மாற்றம் கண்ட தங்கம் விலையில்

ஒரே நாளில் 3 முறை மாற்றம் கண்ட தங்கம் விலையில்

ஒரே நாளில் 3 முறை மாற்றம் கண்ட தங்கம் விலையில்

1


UPDATED : மார் 23, 2026 06:42 PM

ADDED : மார் 23, 2026 10:02 AM

Google News

1

UPDATED : மார் 23, 2026 06:42 PM ADDED : மார் 23, 2026 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் குறைந்து , பிறகு உயர்ந்தது.

சர்வதேச முதலீட்டாளர்கள், கடந்த மாதம் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். இதனால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. இம்மாதம் தங்கம் விலை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு, 330 ரூபாய் குறைந்து, 13,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,640 ரூபாய் சரிவடைந்து, 1,08,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 22) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்


இந்நிலையில் இன்று (மார்ச் 23) காலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

காலையில் இருந்த நிலையை விட மாலையில் சவரனுக்கு மேலும் 2240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360 ஆக உள்ளது.

ஆபரணத் தங்கம் கிராமுக்கு மேலும் ரூ.280 குறைந்து ரூ. 12,670க்கு விற்கப்படுகிறது.

ஆனால், சிறிது நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 670 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 340 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

வெள்ளியும் கிராமக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய் ஆக விற்பனை ஆனது.

வாய்ப்பு குறைவு

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடுகள், தொடர்ந்து கச்சா எண்ணெய் மீது உள்ளது. தற்போது, தங்கத்தின் மீதுள்ள முதலீடுகள் சற்று சரிந்துள்ளன. இந்த சரிவு தற்காலிகமானது. போர் முடிவுக்கு வரும் போது, தங்கம் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு, என்றார்.








      Dinamalar
      Follow us