தித்திக்கும் தீபாவளி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை
தித்திக்கும் தீபாவளி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை
ADDED : அக் 20, 2025 09:47 AM

சென்னை: சென்னையில் இன்று (அக்டோபர் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,000 ரூபாய் சரிவடைந்து, 95,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 190 ரூபாய்க்கு விற்பனையானது. அன்றைய தினம் மதியம் (அக்டோபர் 18) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை இன்று மக்கள் சந்தோஷமாக கொண்டாடி வரும் நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.