ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2280 சரிவு!
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2280 சரிவு!
UPDATED : மே 15, 2026 04:06 PM
ADDED : மே 15, 2026 09:52 AM

சென்னை: சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரண தங்கம் ஒரே நாளில் ரூ. 2280 குறைந்துள்ளது.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் வகையில், தங்கம், வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான இறக்குமதி வரியை, 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.
இதனால், நேற்று முன்தினம் (மே 13) தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்தது. தமிழகத்தில் ஆபரண தங்கம் கிராம், 15,000 ரூபாய்க்கும், சவரன், 1,20,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மே 14), தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,20,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம், வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 315 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று காலை (மே 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில், மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு காணப்பட்டது. சவரன் ரூ.1480 குறைந்து ரூ..1,18, 120 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ, 185 சரிந்து ரூ. 14, 765 ஆக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக இன்று ஒரே நாளில் மட்டும் ரூ2280 குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
