வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
ADDED : மே 05, 2025 10:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இன்று (மே 05) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனையாகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த மே 2ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்பட்டது. மே 3ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (மே 04) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று (மே 05) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்து உள்ளது.

