3வது நாளாக இன்றும் ஏற்றம்; சவரன் 58,000 ரூபாயை கடந்தது தங்கம்!
3வது நாளாக இன்றும் ஏற்றம்; சவரன் 58,000 ரூபாயை கடந்தது தங்கம்!
ADDED : டிச 11, 2024 10:01 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன் 58,000 ரூபாயை கடந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதுமாக இருந்தது.
இந்நிலையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.58,280 ஆக இருக்கிறது. ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்து, ரூ.7,285 ஆக விற்பனையாகிறது.
தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது, பெண்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
10 நாட்களில் (டிச.1 முதல் டிச.10) வரை தங்கம் விலை நிலவரம் வருமாறு;
டிச.1 - ரூ.57,200
டிச.2 - ரூ.56,720
டிச.3 - ரூ.57,040
டிச 4 - ரூ.57,040
டிச. 5 - ரூ.57,120
டிச.6 - ரூ.56,920
டிச.7 - ரூ.56,920
டிச.8 - ரூ.56,920
டிச.9 - ரூ.57,040
டிச.10 - ரூ.57,640