தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
ADDED : ஏப் 16, 2025 09:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.69,760க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் 70,000 ரூபாயை கடந்துள்ளது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8815 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.70,520 ஆக விற்கப்படுகிறது.
விலை உயர்வு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் எதிர்பார்க்கலாம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.