தங்கம் இன்று ரூ.1080 குறைவு; குமுதா மீண்டும் ஹேப்பி அண்ணாச்சி!
தங்கம் இன்று ரூ.1080 குறைவு; குமுதா மீண்டும் ஹேப்பி அண்ணாச்சி!
ADDED : நவ 12, 2024 10:17 AM

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்துள்ளது, பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டதால் தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் கூறினர். நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டு சவரனுக்கு ரூ. 440 குறைந்து, ரூ.57,760க்கு விற்பனையானது.
இந் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய தங்கத்தின் விலையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1.080 அதிரடியாக குறைந்து தங்கம் விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ, 56,680 ஆக உள்ளது.ஒரு கிராம் ரூ.135 குறைந்து, ரூ.7,085 ஆக இருக்கிறது.
அடுத்தடுத்து 2 நாட்களில் பெருமளவில் தங்கம் விலையில் சரிவு காணப்படுகிறது. குறிப்பாக 12 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,960 குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.