தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்; 10வது நாளாக இன்றும் குறைந்த சவரன் விலை
தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்; 10வது நாளாக இன்றும் குறைந்த சவரன் விலை
ADDED : ஆக 20, 2025 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.தொடர்ந்து 10வது நாளாக விலை குறைந்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. தொடர்ந்து 10வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.9180 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ. 73,440 ஆக இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பது பெண்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 நாட்களில் (ஆக.11 முதல் ஆக.20 வரை) ஒரு சவரன் விலை நிலவரம்;
ஆக.11 - ரூ. 75,000
ஆக. 12 - ரூ.74,360
ஆக.13 -ரூ.74,320
ஆக.14-ரூ.74,320
ஆக.15-ரூ. 74,240
ஆக.16-ரூ.74,200
ஆக.17-ரூ.74,200
ஆக.18-ரூ, 74,200
ஆக.19-ரூ. 73,880
ஆக.20-ரூ.73,440