தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!


ADDED : மே 20, 2025 09:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 09:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 17) தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று (மே 19) தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 8,755 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 70,040 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று ரூ.360 சரிந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us