தங்கம் விலையில் புதிய உச்சம்! ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
தங்கம் விலையில் புதிய உச்சம்! ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
ADDED : பிப் 11, 2025 09:59 AM

சென்னை; ஆபரணத் தங்கத்தின் விலையில் புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.64480 ஆக இன்று(பிப்.11) விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து, தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இன்றும், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.8060 ஆக இருக்கிறது. புதிய உச்சமாக ஆபரணத் தங்கம் சவரன் ரூ.64,480க்கு விற்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களில்(பிப். 1முதல் பிப்.10 வரை) தங்கம் விலை நிலவரம்;
01/02/2025 - ரூ.62,320
02/02/2025 - ரூ.62,320
03/02/2025 - ரூ. 61,640
04/02/2025 - ரூ.62,480
05/02/2025 - ரூ.63,240
06/02/2025 -ரூ. 63,440
07/02/2025 - ரூ.63,440
08/02/2025 - ரூ. 63, 560
09/02/2025 - ரூ. 63,560
10/02/2025 - ரூ.63,840